மத்திய சிறைகளில் கைதிகள் - உறவினர்கள் சந்திக்க நவீன முறையில் மையம் அமைப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள் உறவினர்களை சந்திக்கும்போது கண்ணாடி தடுப்பு அமைத்து போன் மூலம் பேசிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகள் உறவினர்களை கம்பிகளுக்கு இடையே சந்தித்து வந்த நிலையில், இந்த நவீன நேர்காணல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மதுரை, கோவை, திருச்சியில் உள்ள மத்திய சிறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையங்கள் விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் ஏற்படுத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கைதிகளை சந்திப்பவர்கள் உள்ளே பொருட்களை கொடுப்பது தடுக்கப்படும் என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments