தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று, தென் மற்றும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments