சென்னை ஐஐடி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மின்சார பந்தைய கார் RFR 23 அறிமுகம்..!

0 2307

சென்னை ஐஐடி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மின்சார பந்தைய காரை சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி அறிமுகம் செய்து வைத்தார்.

RFR 23 எனும் மின்சார பந்தய காரை ஐஐடியில் பயிலும் ரஃப்தார் மாணவர் குழு உருவாக்கியுள்ளது.

வடிவமைத்தல், உருவாக்குதல், ரேசிங் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள ரஃப்தார் மாணவ குழுவினர் மற்றும் ஐஐடி பேராசிரியர் சத்தியநாராயணன் சேஷாத்திரி உறுதுணையோடு இந்த மின்சார பந்தய காரை தயாரித்துள்ளனர்.

இந்த வாகனத்தை இயக்கத் தொடங்கி முதல் நான்கு வினாடிகளில் இதன் வேகம் 100 கிலோ மீட்டரை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வரை இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments