துறைமுகம் கட்டுமானத்தை எதிர்த்து மீனவர்கள் 100 நாட்களாக போராட்டம்..!

கேரள மாநிலம் விழிஞ்சத்தில் துறைமுகம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 100 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்ற மோதலில் 36 போலீஸார் காயமடைந்த நிலையில் சுமார் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோதலில் போலீஸாரின் வாகனங்கள் மற்றும் அரசின் சொத்துகள் சுமார் 85 லட்சத்திற்கு சேதமடைந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீனவர்கள் திங்கட்கிழமையும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments