தாய் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற புது மணப்பெண்.. திருமணமான 13 நாளில் தற்கொலையான அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையில் திருமணமாகிய 13 நாளில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்த தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்த 35 வயது ரேகாவிற்கும் தியாகராய நகரைச் சேர்ந்த 40 வயதான ராஜசேகருக்கும் கடந்த 14ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில், 19ஆம் தேதியன்று வயிறு வலிப்பதாகக் கூறி தாய் வீட்டிற்குச் சென்ற ரேகா அங்கிருந்தே வேலைக்குச் சென்றுள்ளார்.
எனவே, ரேகாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருவதாக ராஜசேகர் போனில் தகவல் தெரிவித்து விட்டு மாமியார் வீட்டிற்கு வந்த போது ரேகா தற்கொலை செய்திருந்தார். இதுகுறித்து சென்னை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Comments