மெட்ரோ ரயில் 5-வது வழித்தடத்தில் 1,640 அடி தொலைவுக்கு மேம்பால வளைவுப் பாதை - மெட்ரோ ரயில் நிர்வாகம்

0 995

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள பட்ரோட்டில் இருந்து, ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரை, 1,640 அடி தொலைவுக்கு,  தரை மட்டத்தில் இருந்து 100 அடி உயரத்தில், மெட்ரோ ரயில் மேம்பால வளைவுப் பாதை அமையவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

410 அடி ஆரத்துடன் கூடிய இந்த வளைவுப் பாதை, கத்திப்பாரா மேம்பாலம் மற்றும் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மெட்ரோ ரயில் பாதை ஆகியவற்றுக்கு மேலே அமைய உள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த உள்ள நிலையில்,  விரைவில் இதற்கான பணிகளை துவக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments