அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் மோதிய விபத்தில் 3 கார்கள், 1 ஆட்டோ சேதம்

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 கார் மற்றும் ஒரு ஆட்டோ சேதமடைந்தன.
அண்ணா சதுக்கத்திலிருந்து, கண்ணதாசன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்து, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மேம்பாலத்தில்,கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
அந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில், 4 வாகனங்கள் சேதமடைந்தன.
முதற்கட்ட விசாரணையில், அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை
Comments