சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்தில் 2,076 பேர் இறப்பு..!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரையிலான 4 ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்தில் 2 ஆயிரத்து 76 பேர் இறந்ததாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தினசரி 35 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சாலையில் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், சர்வீஸ் சாலை இல்லாதது, சரியான திட்டமிடுதல் இல்லாமல் இச்சாலை அமைக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இச்சாலையில் நடைபெறும் விபத்துகளில் 50 சதவீத விபத்துகள் தாம்பரம் முதல் உளுந்தூர்பேட்டை வரையிலான பகுதிகளிலேயே நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments