இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர்கள் சாலையில் சறுக்கி விழும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

0 822

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர்கள் சாலையில் சறுக்கி விழும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று குன்னூர் பெட்போர்டு பகுதியில் இருந்து மவுண்ட் ரோடு செல்லும் சாலையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானபோது எதிரே நடந்து வந்து கொண்டிருந்த நபர் சுதாரித்து சாலையின் ஓரம் ஒதுங்கினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் விபத்து ஏற்பட்டாலும் அன்று விடுமுறை தினம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments