தனியார் நூல் சாயம் ஏற்றும் ஆலையில் தீ விபத்து.. எரிந்து சாம்பலானது 10 லட்சம் மதிப்புள்ள பாய்லர்..!

0 902

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் நூல் சாயம் ஏற்றும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பாய்லர் எரிந்து சாம்பலானது.

சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஆலையில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆலையில் உள்ள பாய்லருக்கு தீ மூட்ட விரகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.

பாய்லரில் இருந்து லீக்கான ஆயில், கீழே எரிந்துக்கொண்டிருந்த தீயில் பட்டு, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments