புதுச்சேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்ததாக கஞ்சா வியாபாரி உள்ளிட்ட 4 பேர் கைது..!
புதுச்சேரி அருகே ரவுடியை வெட்டி கொலை செய்ததாக கஞ்சா வியாபாரி உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.
கணுவாப்பேட் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நேற்று முன்தினம் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து கோட்டைமேட்டைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி முகிலன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments