ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தீப்பிடித்து எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து

0 1112

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விஜயவாடா அருகே சுற்றுலாவை முடித்து கொண்டு தனியார் பேருந்தில் 24 பயணிகள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். விஜயநகரம் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்த து. இதனைக் கண்ட பயணிகள் அனைவரும் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர் .

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக பேருந்தில் தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments