வீட்டின் வெளியே இருந்த துடைப்பத்தை எடுத்த பெண்ணை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு..!

0 2391

கடலூர் அருகே, துடைப்பத்தை எடுத்த போது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கோண்டூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, வீட்டை சுத்தம் செய்வதற்காக, துடைப்பத்தை எடுத்த போது, துடைப்பத்தின் மேல் அமர்ந்திருந்த பாம்பு அவரை கடித்தது.

மயங்கிய உமா மகேஸ்வரி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை மீட்டு காப்பு காட்டிற்குள் விட்டார்.

அதிகாலை வேளையில், வீட்டிற்கு வெளியே, துடைப்பம் உள்ளிட்டவற்றை எடுக்கும் போது, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பாம்பு பிடி வீரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments