குஜராத்தை குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாக்க பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி

குஜராத்தை குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசால் மட்டுமே முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநில தேர்தலை முன்னிட்டு கெடா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டு அளித்த வாக்குகள் நாட்டில் பயங்கரவாதத்தை அழிப்பதில் நிறைய மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றார்.
மேலும், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்த போதெல்லாம் காங்கிரஸ் அதனை குறை கூறிக்கொண்டே இருந்தது என்றும் குற்றம்சாட்டினார்.
Comments