இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 15 நாட்கள் கூட்டுப் பயிற்சி நாளை தொடக்கம்..!

0 856

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 15 நாட்கள் கூட்டுப் பயிற்சியான 'ஆஸ்திராஹிந்த்' (Austra Hind) திங்கட்கிழமையன்று தொடங்குகிறது.

இருநாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் அந்த கூட்டுப் பயிற்சி, ராஜஸ்தானின் பிகானெர் மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லை அருகே வரும் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் ஆயுதங்கள், கண்காணிப்பு மற்றும் தொலைதொடர்பு கருவிகளை கையாளுதல், துப்பாக்கிச் சுடுதல், கடின சூழல்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் இடம்பெறும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments