பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா நாடு.. 3 பில்லியன் அமெரிக்க டாலரை விடுவிக்க ஐ.நாவிற்கு வேண்டுகோள்..!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா நாடு தங்களின் 3 பில்லியன் அமெரிக்க டாலரை விடுவிக்க ஐ.நாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் எண்ணெய் வளம் நிறைந்த அந்நாட்டில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவுகளால் வறுமை அதிகரித்து சுமார் 7 பில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டு மின்சாரம், மழை வெள்ள பாதிப்பைச் சமாளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதில், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள வெனிசுலா டாலரை ஐ.நா நிர்வகித்து தேவையான நிதியை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments