சைக்கிளில் 7000 கி.மீ தூரம் பயணம் செய்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண பிரான்சில் இருந்து வந்த இரண்டு பேர்..!

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண பிரான்சில் இருந்து இரண்டு பேர் சைக்கிளில் வந்தடைந்தனர்.
மெஹ்தி பாலாமிசா மற்றும் கேப்ரியல் மார்ட்டின் ஆகியோர் 3 மாதங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து சைக்கிளில் புறப்பட்டனர்.
7 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, கத்தார் சென்றடைந்த அவர்கள், உடல் சோர்வாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வழிநெடுகிலும் மக்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்ததாக தெரிவித்த அவர்கள்,டென்மார்க்கிற்கு எதிராக பிரான்ஸ் விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
Comments