தூத்துக்குடியில் உள்ள கனிமொழியின் வீட்டில் நுழைந்த மர்மநபரிடம் விசாரணை
திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடியில் தங்கியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐயப்பன் நகரில் உள்ள வீட்டில் சனிக்கிழமை இரவு மர்ம நபர் அத்துமீறி நுழைந்தபோது கனிமொழி அங்கு இல்லை.
அங்கிருந்த பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்த போலீசார் மர்ம நபர் யார்? எதற்காக உள்ளே நுழைந்தார் என்று விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நான்கு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Comments