ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அன்புமணி கோரிக்கை
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடை சட்ட மசோதா, இன்றுடன் காலாவதியாகிவிடும் என்பதால், ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
நாகையில் பேட்டியளித்த அவர், அம்மாவட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நெய்வேலிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments