துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு மீண்டும் பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான்

கடந்த 3-ந்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மீண்டும் பேரணியில் பங்கேற்றார்.
தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இன்ரான்கானை, வாஜிராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்த இம்ரான்கான், ராவல்பிண்டியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
Comments