சாலையின் குறுக்கே காரை நிறுத்தி ரகளை செய்த திமுக மாவட்ட கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..!

0 1375

விழுப்புரத்தில் காருக்கு வழிவிடும் தகராறில் 2 மணி நேரமாக சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வைத்திருந்த திமுக மாவட்ட கவுன்சிலருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுகவைச் சேர்ந்த ராஜிவ்காந்தி விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு விழுப்புரத்திலிருந்து தனது ஊரான ஆ.கூடலூருக்கு காரில் சென்ற போது ஆயந்தூர் பகுதியில் எதிரே வந்த காருக்கு வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், தன்னைக் கடந்த சென்ற கார் மறுபடியும் வந்தால் தான் தனது காரை எடுப்பேன் என்றுக் கூறி நடுவழியில் காரை நிறுத்தி வைத்தார்.

அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலரை அனுப்பி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments