மெக்சிகோ கடலில் காணாமல் போன இளைஞர் 15 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு..!

மெக்சிகோ வளைகுடாவில் காணாமல் போன பயணியை 15 மணி நேரத்திற்கு பிறகு கடலோர காவல்படையினர் மீட்டனர்.
நியூ ஆர்லியன்ஸில் இருந்து மெக்சிகோவின் கோசுமெல் நகருக்கு கப்பலில் குடும்பத்தினருடன் சென்றபோது 28 வயதான இளைஞர் திடீரென மாயமானார்.
அவரது சகோதரி அளித்த புகாரை அடுத்து, வான் மற்றும் கடல் வழியாக அவரைத் தேடும் பணி நடைபெற்றது.
லூசியானாவின் தென்மேற்கு கணவாய்க்கு தெற்கே 20 மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த அவர், கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Comments