செல்போன் திருடனை மடக்கிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கல்

0 1518

சென்னை பேசின்பிரிட்ஜில் செல்போன் திருடனை பிடித்த கர்ப்பிணி பெண் காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சுசிலா என்பவர் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் பணி சம்பந்தமாக அவர் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பேருந்து காவல் நிலையம் அருகே சென்ற போது திடீரென்று பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது 2பேர் செல்போனை திருடிக் கொண்டு ஓட முயற்சி செய்த போது அவர்களில் ஒருவரை சுசீலா மடக்கிப் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

அவனிடம் இருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments