தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணியை ரயில் வருவதற்குள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்..!

0 1071

நியூ யார்க்கில் உள்ள மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை, ரயில் வருவதற்குள் 2 போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ரயில் நிலையத்தின் நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எதிரே இருந்த மற்றொரு நடைமேடையில் நின்றிருந்த பயணி தண்டவாளத்தில் தவறி விழுந்ததை பார்த்துள்ளனர்.

அந்த நபரைக் காப்பற்றுவதற்காக வேகமாக ஓடிச் சென்று சுரங்கப்பாதை மூலமாக, அந்த நடைமேடைக்கு சென்றடைந்த போலீசார், ரயில் வருவதற்குள்ளாக பயணியை மீட்ட வீடியோவை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments