விருத்தாசலத்தில், பேருந்தில் ஏறுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பேருந்தில் ஏறுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சின்ன வடவாடியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்துள்ளனர்.
வயலூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு காத்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் ஏறுவதற்கு வழிவிடுமாறு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதில் ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
Comments