சென்னையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆறரை கோடி அபேஸ் செய்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி
சென்னையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆறரை கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்ததாக, போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
முகப்பேரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற தனது மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்கக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
சி.எம்.தனிப்பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறிய ஆனந்த பத்மநாபன், பணிநியமன ஆணை வாங்கித் தருவதாக கூறி இரு தவணைகளாக 25 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.
Comments