அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. மகிழ்ச்சியில் அனைத்து வீரர்களுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அறிவித்த சவுதி மன்னர்..!

0 2829
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. மகிழ்ச்சியில் அனைத்து வீரர்களுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அறிவித்த சவுதி மன்னர்..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவூதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிப்பதாக அந்நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல்சௌத் அறிவித்துள்ளார்.

இந்திய மதிப்பில் ஆர்.எம்.6 மில்லியன் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரின் விலை சுமார் 8 முதல் 11 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில், தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரோனால்டோவுக்கு கடைசி போட்டி என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. முதல் போட்டியில் அபாரமாக ஆடிய சவுதி அரேபியா, அர்ஜெண்டினாவிற்கு தோல்வியை பரிசளித்தது.

இதை சிறப்பிக்கும் விதமாக அந்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவித்து மன்னர் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments