ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கியதில் வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

0 1085

சேலத்தில் பருப்பு குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு 5 நிறுவனங்கள் மூலமாக பருப்பு மற்றும் பாமாயில் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசுக்கு கிடைத்த தகவலின்பேரில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் ஒரு பருப்பு குடோன் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மேட்டுவேளாளர் தெருவில் சந்தீப் என்பவருக்கு சொந்தமானதாகும்.

அங்கிருந்த ஊழியர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடோனுக்கு சீல் வைத்த வருமானவரித்துறையினர், நேற்று மாநகரக் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments