ஆபாசப் படத்தை காட்டி ஏழைப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்.. ஆண் நண்பருடன் சேர்த்து அதிரடியாக கைது செய்த போலீசார்..!

0 3062
ஆபாசப் படத்தை காட்டி ஏழைப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்.. ஆண் நண்பருடன் சேர்த்து அதிரடியாக கைது செய்த போலீசார்..!

ஆந்திராவில் துணிக்கடைக்கு வரும் ஏழைப்பெண்களை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தவறாகப் பயன்படுத்திய பெண், தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

விஜயவாடாவைச் சேர்ந்த நாகசாயி என்ற இளம்பெண் நடத்தி வரும் துணிக்கடைக்கு சில வாரங்களுக்கு முன்பு வந்த 20 வயது பெண்ணை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கத்தில் ஆண் நண்பர் உதவியுடன் நாகசாயி ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த வீடியோவை இளம்பெண்ணிடம் காட்டி, சாட்டிங் செய்ய வைத்து இளைஞருடன் ஒன்றாக இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து இளைஞரிடம் நாகசாயி பணம் கேட்டு மிரட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments