பிரபல பாப் பாடகர் 'கிறிஸ் வூ' 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் சிறை..!

0 932

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பிரபல பாப் பாடகர் கிறிஸ் வூ-விற்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிறந்து, கனடா நாட்டு குடியுரிமை பெற்ற கிறிஸ் வூ, பாப் இசை மூலம் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.

11 சீன மொழி திரைப்படங்களில் நடித்துள்ள் கிறிஸ் வூ, பல முன்னனி நிறுவனங்களின் விளம்பரத்தூதுவராக இருந்துவந்தார்.

இந்நிலையில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், 2 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ் வூ பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார்.

அதை தொடர்ந்து மேலும் பல பெண்கள் அவர் மது விருந்துக்கு அழைத்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சீன நீதிமன்றம், அதன்பின் அவர் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments