பேருந்தில் பயணிப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டதில், ஒரு மாணவர் படுகாயம்..!

விழுப்புரம் திண்டிவனம் அரசுக்கல்லூரியில் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டதில், ஒரு மாணவர் காயமடைந்தார்.
திண்டிவனம் மேல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக இருதரப்பு மாணவர்களிடையே இருந்து வந்த மோதலால், அவர்கள் கல்லூரிக்கு வெளியே மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதில், ஒரு மாணவர் காயமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் கல்லூரிக்குச்சென்று விசாரணை நடத்தினர்.
Comments