பரிகாரம் தேடிய நபருக்கு ஜோசியர் சொன்னதை நம்பி பாம்பிடம் நாக்கை நீட்டி பாம்புக்கடி வாங்கிய விவசாயி..!

0 1074

ஈரோடு அருகே பாம்பு தன்னை கடிப்பது போல் கனவு கண்டதால், ஜோசியர் கூறியபடி, கண்ணாடி விரியன் பாம்பு முன்பாக நாக்கை நீட்டி, பரிகாரம் தேடிய விவசாயியின் நாக்கில் பாம்பு கடித்து விட்டது.

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா, அடிக்கடி பாம்பு கனவில் வந்ததால், தான் பாவம் செய்து விட்டதாக நினைத்து, ஜோசியர் ஒருவரை நாடியுள்ளார். 

ஜோசியர் கூறியபடி அதே பகுதியில் உள்ள சாமியாரை சந்தித்த ராஜா, நடந்தவற்றை விவரித்துள்ளார். பின்னர் சாமியார்,  தான் வளர்த்துவரும் பாம்பின் முன், அவரை நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுமாறு கூறியுள்ளார்.

ராஜா தன் நாக்கை நீட்டியபோது,  பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சாமியார்,  விஷம் உடலின் பிற பாகங்களுக்கு பரவுவதை தடுக்க, உடனடியாக ராஜாவின் நாக்கை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கிய விவசாயி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

4 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த ராஜா இன்று வீடு திரும்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments