சிஐடி போலீஸ் போல் நடித்து டீக்கடைக்காரரை விசாரணைக்கு வருமாறு அழைத்து காரில் கடத்தி ரூ.1 லட்சம் பறிப்பு..!

0 927

தாம்பரத்தில் டீக்கடை நடத்திவரும் திரிபுரா மாநிலத்தவரை, சிஐடி போலீஸ் போல் நடித்து கடத்திச்சென்று, ஒரு லட்சம் ரூபாய் பறித்த 3 பேரை, போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் இரும்புலியூரில் திரிபுராவைச் சேர்ந்த அன்வர் உசேன் நடத்தி வரும் டீக்கடைக்கு, கடந்த 22 ஆம் தேதி காரில் வந்த 5 பேர், தாங்கள் திரிபுரா சிஐடி போலீஸ் என்றும், விசாரணைக்கு வருமாறும் அன்வரை காரில் கடத்திச்சென்றனர்.

5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு, அவரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரிலிருந்து தள்ளி விட்டுவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

அங்கிருந்து லாரி மூலம், தாம்பரம் திரும்பிய அன்வர் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி, திரிபுராவை சேர்ந்த 3 பேரை கைது செய்ததோடு, பணத்தோடு தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments