78 வயதான தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து மகளும் உயிரிழப்பு..!

0 902

கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு பகுதியில், தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மகளும் உயிரிழந்தார்.

78 வயதான வேலம்மாள், அவரது மகள் செல்வி வீட்டில் வசித்து வந்த நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று மாலை உயிரிழந்தார்.

இறுதி சடங்கிற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்த அவரது மகள் 57 வயதான செல்வி திடீரென மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments