நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இரண்டு பேர் கைது..!

0 796

திரைப்பட நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இரண்டு கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

கடந்த 18ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்ற நடிகர் இளங்கோ குமரவேலிடம், விலை உயர்ந்த செல்போனை 2 பேர் பறித்து கொண்டு தப்பிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில், 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது பதிவானதையடுத்து, பைக்கின் பதிவு எண் கொண்டு இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நடிகர் குமரவேலின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments