டெல்லி ஆம் ஆத்மி கட்சி மூத்தத்தலைவர் தற்கொலை

0 752

டெல்லியில் உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவிற்கு, சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத்தலைவர் தற்கொலை செய்து கொண்டது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரஜோரி கார்டனைச் சேர்ந்த சந்தீப் பரத்வாஜ், ஆம் ஆத்மி கட்சியின் வர்த்தகப் பிரிவு செயலாளராக, கட்சிப்பணியாற்றியதோடு, மார்பிள் தொழிலும் செய்து வந்தார்.

விவாகரத்தான நிலையில் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, தேர்தலில் போட்டியிட பரத்வாஜ்க்கு வழங்கப்பட்ட சீட்டை, வேறொருவருக்கு விற்பனை செய்ததும், அவரது தற்கொலைக்கு ஒரு காரணம் என்று, பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments