சென்னை மாநகராட்சியில் உரிமம் இன்றி இயங்கிய 86 கடைகளுக்கு சீல்..!

0 620

சென்னை மாநகராட்சிக்கு தொழில் வரி, வாடகை செலுத்தாத கடைகள் மற்றும் உரிமம் இன்றி இயங்கிய 86 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பிராட்வே மற்றும் தங்க சாலையில் உள்ள 70 கடைகளுக்கும், நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கண்ணப்பர் திடலில் 16 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொழில் வரி மற்றும் வாடகை செலுத்தாமலும், உரிமம் இன்றியும் இயங்கிய கடைகளால், சென்னை மாநகராட்சிக்கு வர வேண்டிய சுமார் 54 லட்சம் ரூபாய் தொகை, நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments