கொள்ளையனின் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில், முதன்மைக் காவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

0 781

மதுரையில் கொள்ளையனின் குடும்பத்தினரிடம் இருந்து லஞ்சம் வாங்கிய புகாரில், முதன்மைக் காவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதிச்சியம் காவல்நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன்.

இவர் கடந்த 2019ம் ஆண்டு கூடல் புதூர் காவல்நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றியபோது, திருப்பத்தூரைச் சேர்ந்த கொள்ளையன் கணேசன் மீது ஜாமீனில் வெளியே வரும் வகையிலான வழக்குப்போடுவதாக கூறி, அவரது குடும்பத்தாரிடம் இருந்து கூகுள் பே மூலமாகவும், ரொக்கமாகவும் 72 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்போது ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments