திருப்பத்தூர் பாஜக பிரமுகர் கிருஷ்ணகிரியில் வெட்டிக்கொலை - 6 பேர் கைது..!

திருப்பத்தூர் பாஜக பிரமுகர் கிருஷ்ணகிரியில் வெட்டிக்கொலை - 6 பேர் கைது..!
திருப்பத்தூர் பாஜக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 6பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக, ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திருப்பத்தூர் நகர பாஜக நகரச் செயலாளராக இருந்த கலிகண்ணன் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அரி விக்னேஷ் என்பவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கலிகண்ணனை கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
Comments