போலீஸ் எனக்கூறி மிரட்டி ரூ.25,000 பணம் பறிப்பு - ஊர்க்காவல் படை வீரர் கைது..!

0 800
போலீஸ் எனக்கூறி மிரட்டி ரூ.25,000 பணம் பறிப்பு - ஊர்க்காவல் படை வீரர் கைது..!

சென்னை எழும்பூரில் போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த, ஊர்க் காவல்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்த கேசவன், அண்ணா சாலையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 21ந்தேதி இரவு பணிமுடித்து வீடு திரும்பிய அவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரி எனக்கூறி, பொது இடத்தில் புகைப் பிடித்துக் கொண்டிருந்ததாக மிரட்டி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.

புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நெற்குன்றம் நகரைச் சேர்ந்த டான் ஸ்டுவார்ட் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments