இரண்டாவது திருமணம் செய்ய மதம் மாறிய பெண்ணுக்கு கத்திக்குத்து.. அடியாட்களுடன் வந்து கணவர் வெறிச்செயல்..!

0 1649
இரண்டாவது திருமணம் செய்ய மதம் மாறிய பெண்ணுக்கு கத்திக்குத்து.. அடியாட்களுடன் வந்து கணவர் வெறிச்செயல்..!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புரில் மதம் மாறி திருமணம் செய்ய முயன்ற இளம் பெண் சில ரவுடிகளால் கத்தியால் குத்தப்பட்டார்.

இதன் வீடியோ காட்சி வைரலாகிப் பரவியதை அடுத்து காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே மணமான அந்தப் பெண் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற போது சில ரவுடிகளுடன் வந்த அவர் முதல் கணவர் பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவரைக் காக்க வந்த சகோதரியும் தாயாரும் கத்திக்குத்து காயம் அடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தையடுத்து கிராமத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments