பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு அத்துமீறல்.. பாதுகாப்பு வளையத்தை மீறியதற்காக 3 பேர் கைது..!

0 1197
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு அத்துமீறல்.. பாதுகாப்பு வளையத்தை மீறியதற்காக 3 பேர் கைது..!

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு வட்டத்தை மீறியதற்காக அகமதாபாதில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மோடியின் நிகழ்ச்சியைப் படம் பிடித்த டிரோனை என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் சுட்டு வீழ்த்தினர்.

பிரதமர் மோடி பாவ்லா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது டிரோன் ஒன்று வட்டமிட்டதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து அந்த டிரோனை தேசிய பாதுகாப்பு வீரர்கள் சுட்டுவீழ்த்தினர். டிரோன்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments