கடனாக வாங்கிய பூச்சி மருந்துகளுக்கு பணத்தை செலுத்த முடியாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு..!

0 1400

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் பொய்யா பிள்ளைசாவடி அருகே கணேசன் என்பவர்  கடன் பெற்று பூச்சி மருந்து கடை நடத்தி வந்தார்.

இவரிடம் பூச்சிமருந்தை கடனாக வாங்கியவர்கள் பணத்தை தராமல் இருந்துவந்ததாக தெரிகிறது.

பூச்சி மருந்து நிறுவனங்கள் கடனை செலுத்துமாறு நிர்பந்தித்த நிலையில், மனமுடைந்த கணேசன், மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு புதுச்சத்திரம், அன்னப்பன்பேட்டை முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயக்கமடைந்த மனைவி மற்றும் குழந்தைகள் ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments