சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் செய்த விவகாரத்தில் 2 பேர் கைது..!

0 1190

சென்னையில் சட்டவிரோதமாக சிம்பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் செய்த விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அமைந்தக்கரையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அதிகளவில் வெளிநாடுகளுக்கு அழைப்புகள் செல்வதாக கிடைத்த தகவலின் படி, நேற்று மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வெளிநாடு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் 4 சிம்-பாக்ஸ் கருவிகள், 120 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சிம்பாக்ஸ் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சல்மான் ஷெரீப் என்பவரையும், வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்த ஜாகீர் உசேன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments