தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1142

தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகத்தின் மேல் நகர்ந்து வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வட தமிழகத்தின் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments