திருப்பத்தூர் பாஜக பிரமுகர் கலிகண்ணன் கிருஷ்ணகிரியில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை..!
திருப்பத்தூரை பாஜக பிரமுகர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வேப்பாலம்பட்டியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக, ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர், திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவராக இருந்த கலிகண்ணன் என்பது, விசாரணையில் தெரியவந்தது.
இவர், கடந்த 6 மாத காலமாக மனைவியை விட்டு பிரிந்து இருந்ததால், குடும்பத்தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments