அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச்செல்வதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகன், அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சென்ற தனியார் பேருந்து ஒன்றை லட்சுமிபுரம் பகுதியில் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மோகன், அதிகளவில் பயணிகளை ஏற்றிச்சென்றதற்காக ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கடுமையாக எச்சரித்ததுடன், அபராதமும் விதித்தார்.
Comments