சீனாவில் 30 ஆயிரத்தை கடந்த ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு.. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

0 979

சீனாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு முதன்முறையாக 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து பதிவான அதிகப்பட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். நேற்று 31 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காயில் 5 ஸ்டார் உணவகங்கள், ஷாப்பிங் சென்டர்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று அதிகரித்து வருவதால் பெய்ஜிங்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments