சிம்பாக்ஸ் பயன்படுத்திய 3 பேரை பிடித்து பயங்கரவாதியுடன் தொடர்பா? என விசாரணை

சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக சிம்பாக்ஸ் கருவியை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் மேற்கொண்ட 3 பேரை பிடித்து ஐ.பி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக செல்போன் அழைப்புகள் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐ.பி. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த வெளிநாடுகளில் இருந்துவரும் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் சிம்பாக்ஸ் கருவிகள், சுமார் 150 சிம் கார்டுகள், 8 ரவுட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை பயன்படுத்திய 3 பேரை பிடித்த அதிகாரிகள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உண்டா? என விசாரித்து வருகின்றனர்.
Comments