பைக் மீது அதிவேகமாக வந்த டெம்போ ட்ராவலர் வேன் மோதி விபத்து -தனியார் ஹோட்டல் மேலாளர் தூக்கி வீசப்பட்டு பலி

0 1250

சென்னை கோயம்பேடு அருகே பைக் மீது அதிவேகமாக வந்த டெம்போ ட்ராவலர் வேன் மோதியதில், தனியார் ஹோட்டல் மேலாளர் உயிரிழந்தார்.

கரையான்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன், வடபழனியில் உள்ள தனியார் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல பணியை முடித்து, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டெம்போ ட்ராவலர் வேன், இவரது வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டெம்போ ட்ராவலர் வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments